பொதுவாக்கெடுப்பு மக்கள் இயக்க சின்னத்தெரிவு – செப்டம்பர் 26

பொதுவாக்கெடுப்பு மக்கள் இயக்கத்திற்கான சின்னத் தெரிவிற்கான போட்டியை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பெப்ருவரி 2 ஆம் திகதி அறிவித்திருந்தது. இப்போட்டியில் கலந்து கொண்ட அனைத்து தமிழ் உறவுகளுக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கின்றது. உங்களது பங்குபற்றல்,  ஈழத் தமிழ் தேசத்தின் பொது வாக்கெடுப்பிற்கான அரசியல் பெருவிருப்பை உலகிற்கு முரசறையும்.

போட்டியின் நடுவர்கள் பேராசிரியர் ஜோசெப் சந்திரகாந்தன் (Canada), திருமதி. அனோஜா முத்துசாமி (UK ) , திரு. வேலும்மயிலும் மனோகரன் (France)  ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்கள். நடுவர்களால்  தேர்ந்தெடுக்கப்படும் முதலாவது, இரண்டாவது (ஐந்து) சின்னங்கள் செப்டம்பர் மாதம் 26 ஆம் தேதி அறிவிக்கப்படும்.

 அதனைத் தொடர்ந்து பொதுச்சின்ன அறிமுகக் கூட்டமும் பரிசளிப்பு நிகழ்வும் நடைபெறும் காலம், நேரம் அறிவிக்கப்படும்.

தமிழரின் தலைவிதி தமிழரின் கையில் !

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

Logo Design Competition